போஃபர்ஸ் ஊழலுக்கு பிறகு காங்கிரஸ்க்கு பெரும்பான்மையே  கிடைக்க வில்லை;  போஃபர்ஸ் ஊழலை போன்று நிலக்கரி ஊழல் விவகாரத்தையும் மக்கள் மறந்து விடுவார்கள் என மத்திய அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேயின் கருத்துக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, பா.ஜ.க முக்கிய தலைவர்களில் ஒருவரான பல்பீர் புஞ்ஜ்

தெரிவிக்கையில் , “”போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தை மக்கள் மறந்துவிட்டார்களா இல்லைய என்பது வேறுவிஷயம். ஆனால், அதற்குப் பின் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ்க்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை என்பதை அந்த கட்சி மறந்துவிட கூடாது” என்றார்.

இந்திராகாந்தியின் மறைவை தொடர்ந்து நடந்த தேர்தலில் அனுதாப அலையல் 400 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால் போபர்ஸ் ஊழலுக்குப் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியையே இழந்தது. அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ்க்கு பெரும்பான்மையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

Tags:

Leave a Reply