நரேந்திர மோடியின் பிறந்த நாள் பீகாரில்  சிறப்பாக கொண்டாடப்பட்டது குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் பிறந்தநாள் விழா, பீகாரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவரது 62வது பிறந்த நாளை முனிட்டு , பீகார் மாநில பாரதிய ஜனதா சார்பில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்விழாவில், பீகார் மாநில பாரதிய ஜனதா மூத்த தலைவரும், மாநில மீன்வளத்துறை அமைச்சருமான, கிரிராஜ்சிங், 62 கிலோ எடையுள்ள கேக்கைவெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். ஏராளமான பாரதிய ஜனதா வினர் இதில் கலந்துகொண்டனர்.

இது குறித்து நிதிஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “”நரேந்திர மோடியின் பிறந்த நாளை, இங்கு கொண்டாடியதில், எனக்கு எந்தவருத்தமும் இல்லை. நானும்கூட, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். எனக்குள்ள ஒரேவருத்தம், பிறந்த நாளுக்காக வெட்டியகேக்கில், ஒருசிறிய துண்டைக் கூட, எனக்கு தரவில்லையே என்பதுதான்,” என்றார்.

Leave a Reply