திரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்க்கான  தனது  ஆதரவைவாபஸ் பெற்றது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தந்து வந்த ஆதரவை திரிணமூல் காங்கிரஸ் வாபஸ் பெற்றது .சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதித்தது. சமையல் எரிவாயுககு கட்டுப்பாடுகளை விதித்தது, டீசல் விலை உயர்வு போன்ற மத்திய

அரசின் நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி இந்தமுடிவை எடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் நடை பெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது.இது குறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : மத்திய அரசுக்கு தந்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் . .மத்திய அரசு எந்த முடிவையும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து எடுப்பதில்லை , தங்களுக்கு உரியமரியாதை தரப்படவில்லை என குறை கூறினார்.

Leave a Reply