ஊழல்களை திசைதிருப்பவே  விலை உயர்வு;  பொன். ராதாகிருஷ்ணன் பா.ஜ.க மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பல வீனமான பயனற்ற பிரதமராகவே மன்மோகன் சிங் செயல்பட்டுவருகிறார்.

கூட்டணி கட்சி களை கட்டுப்படுத்த முடியாதவராகவும் மந்திரிகளை கட்டுப்படுத்த இயலாதவராகவும் . எல்லா துறைகளிலும் தோல்விகண்ட பிரதமராகவும் விளங்குறார்.

ஊழல்களை திசைதிருப்ப டீசல் விலை உயர்வு, வீட்டு சமையல்கியாஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு போன்றவற்றை அறிவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர்.

நாளை நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்தில் நானும் (பொன்.ராதாகிருஷ்ணன்) அகில இந்திய செயலாளர் முரளிதர ராவ்வும் சென்னையில் நடக்கும் மறியலில் கலந்துகொள்கிறோம். வரும் 24-ந் தேதி தமிழகமெங்கும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னை அண்ணா மெமோரியல்ஹால் முன்பு நடைபெறும் போராட்டத்திலும் நான் பங்கேற்கிறேன்.என தெரிவித்தார்

Tags:

Leave a Reply