ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தந்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டது . இதனை தொடர்ந்து மத்திய அரசு தற்போது மைனாரிட்டி அரசாகிவிட்டது, மேலும் தற்போது ஆட்டம் கண்டும் வருகிறது.

இது குறித்து பாஜக தலைவர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;- ஆளும் இந்த மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் எண்ணம் இல்லை. இந்த அரசை வீழ்த்த வேண்டிய வேலை எதிர்க்கட்சிகளுக்கு இருக்காது. மத்திய அரசை வீழ்த்துவதற்க்கு பாஜக காரணமாக இருக்காது. மத்திய அரசு தனது சொந்த செய்கைகளாலே கவிழ்ந்து விடும். இதை பற்றி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசுதான் கவலைப்பட வேண்டும்.

பா.ஜ.க வைப் பொறுத்தவரை குழப்பம் இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் அதைச்சந்திக்க தயாராகவே உள்ளோம் . பாராளுமன்றத்துக்கு திடீர் என தேர்தல்வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றார் .

Leave a Reply