பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால்  சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ரத்துசெய்யும் மம்தா பானர்ஜியைப் போன்று , தேசியவாத காங்கிரசும் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை, துணிச்சலாக திரும்ப பெறவேண்டும்’. பா, ஜனதா மத்தியில் ஆட்சிக்குவந்தால் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ரத்துசெய்யும் என்று , பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான கோபிநாத் முண்டே வலியுறுத்தியுள்ளார் .

இது குறித்து மும்பையில், நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : டீசல் விலை யேற்றம், சமையல்காஸ் சிலிண்டர் கட்டுப்பாடு , சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, உள்ளிட்ட பிரச்னையில், “மத்திய அரசுக்கு தந்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது ‘ என்ற, தைரியமான முடிவை, மம்தாபானர்ஜி எடுத்துள்ளார். அதேபோன்ற முடிவை, சரத் பவாரும் எடுக்கவேண்டும்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்குவந்தால், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ரத்துசெய்யும் என்று முண்டே கூறினார்.

Tags:

Leave a Reply