இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ்செய்த துரோகத்தை திசை திருப்ப சதி இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜ பக்சேவின் இந்திய வருகையை கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்றுவரைக்கும் கடுமையாக எதிர்த்து வரும் கட்சி பாரதிய ஜனதா . டெல்லி காமன்வெல்த் போட்டியின்போதும், மும்பையில் கிரிக்கெட் போட்டியின்போதும் இந்தியாவுக்கு ராஜபக்சே வந்து பங்குகொண்டதை

பாரதிய . ஜனதா கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனால் அப்போதெல்லாம் டெல்லிக்கோ, மும்பைக்கோ சென்று ஏன் போராடவில்லை? என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ;- இலங்கையில் அப்பாவி தமிழர்களை மத்திய அரசின் உதவியுடன் கொன்று குவித்தபோது போராடாதவர்கள், இலங்கை தமிழர்களுககாகவும், தமிழக மீனவர்களுக்காகவும் குரல்கொடுத்து வரும் பாரதிய ஜனதாவை எதிர்க்கிறார்கள் எனில் இதன் பின்னணியில் ஏதோ ஒரு உள் நோக்கம் உள்ளது.

இலங்கை தமிழர்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா தான் . எதிர்ப்பை காட்டுவதும் , கருத்து சொல்வதும் அரசியல் கட்சிகளின் ஜனநாயக_உரிமை. ஆனால் மத்திய பிரதேசத்துக்கு போராடுவதற்காக சென்றவர்களை பாரதிய . ஜனதா அரசு மிக கண்ணியமாக நடத்துகிறது. முதல்-அமைச்சரே பேச அழைத்த போதும் சம்மதிக்கவில்லை. முதல்-மந்திரி நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் பேச மறுத்துள்ளார்கள் . இதுதான் தமிழர் நாகரீகமா?

ராஜபக்சேவை பிரதமர் வரவேற்றிருக்கிறார் . காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. அப்படியிருக்க காங்கிரஸ்_அலுவலகத்தை முற்றுகையிட செல்லவில்லை. டெல்லிக்கு போராடுவதற்கு செல்லவில்லை. ஆனால் பாஜக,வுக்கு எதிராக போராடுகிறார்கள். பாஜக அலுவலகத்தை முற்றுகை யிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்?

இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ்செய்த துரோகத்தை திசை திருப்ப சதிநடக்கிறது. எந்த ஒரு போராட்டமானாலும் கட்சி அலுவலகங்கள், கட்சி தலைவர்களின் வீடுகள் முன்பு நடத்த அனுமதிப்பது மிகமோசமான பின் விளைவுகளை உருவாக்கும் . பா.ஜ.க.வும் இதேபோன்று எங்காவது சென்று போராடவேண்டிய சூழ்நிலை வரலாம். ஆனால் இந்தமாதிரி போராட்டங்களை அனுமதிப்பதினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அரசு தான் முழுபொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.

Tags:

Leave a Reply