காங்கிரஸ்க்கு 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் மூலம் பணம் காய்ப்பதா க குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார் .

தொலைகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், பணம் மரத்திலிருந்து காய்க்கவில்லை என்று கூறியிருந்தார். இது குறித்து பேசிய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, பணம் மரத்திலிருந்து காய்க்காது என்பது மக்களுக்கும் தெரியும். ஒரு சிறந்த பொருளாதார வல்லுனரான பிரதமர், எப்படி இந்த வகையிலெல்லாம் பேசி மக்களை சமாதான செய்கிறார் .

காங்கிரஸ் கட்சிக்கு ஸ்பெக்ட்ரம் முறைக்கேடு, நிலக்கரி சுரங்க முறைகேடு மூலம் பணம் காய்க்கிறது என்பது எங்களுக்குதெரியும். நிலக்கரி சுரங்க முறைகேட்டை விட காங்கிரஸ்க்கு மிகப் பெரிய பணம் காய்க்கும் மரம் ஏதும் இல்லை என்று கூறினார்.

Leave a Reply