காங்கிரஸ் கட்சி இளைஞர்களை ஏமாற்றுகிறது குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தாக்கி பேசினார்.

இளைஞர்களுக்கு வேலை தருவதாக போலியான வாக்குறுதிகளை காங்கிரஸ் தந்துள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர

மோடி குற்றம் சாட்டியுள்ளார் .

மேலும் அவர் பேசுகையில்; காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்களில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு வேலை தரப்படும் என்று கூறப்பட்டது. பிறகு கடந்த 2009ம் ஆண்டில், 1 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி தந்தனர் . அனால் அதை அவர்கள் செய்தார்கள ? என்று கேள்வி எழுப்பினார்.

அவர்கள் ஏன் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களை நாம் மன்னிக்க கூடாது. ஏமாற்றுவது நமது இயல்பு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார் .

Leave a Reply