நியூயார்க்கிலேயே    வால் மார்ட் நிறுவனம் மூடப்படும் நிலைமையில் உள்ளது நியூயார்க் நகரில் வால் மார்ட் நிறுவனம் மூடப்படும் நிலைமையில் உள்ளது , ஆனால் மத்திய அரசு அதனை இங்கு திறந்துகொள்ளஅனுமதி தந்துள்ளது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பாக அவர் தனது வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது : எப்.டி.ஐ., அனு மதித்து வால் மார்ட் நிறுவனத்துக்கு பொக்கேகொடுத்து வரவேற்பு தரும் மத்திய அரசு, சிறு வணிகர்களுக்கு பாதிப்பு உருவாகிறது என்று பிரசாரம் செய்கிறது.

கடந்த ஜூன் 30ம் தேதி, வால் மார்ட் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 10 ஆயிரம் பேர் பங்கு கொண்ட மாபெரும் பேரணி நடத்தபட்டது . அதற்கு முன்பு ஜூன் 1ம் தேதி வால் மார்ட் நிறுவனத்தை மூட வேண்டும் என்று வாஷிங்டன்னில் போராட்டம நடத்தப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply