இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே தலை வணங் குவேன்;  மம்தா பானர்ஜி  இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே, தலை வணங் குவேன்; என்னால், கடிக்க முடியா விட்டால், சீறுவேன். ; கர்வமுடன் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு, ஒரு போதும், தலை வணங்கமாட்டேன்,” என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; அதிகாரத்தின் மூலம் எங்களை யாரும் மிரட்டமுடியாது; ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரத்துக்கு, ஒரு போதும் பயப்பட மாட்டேன். இந்நாட்டு மக்களுக்கு மட்டுமே, தலை வணங் குவேன்; என்னால், கடிக்க முடியா விட்டால், சீறுவேன். மக்களின் உரி மைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது, சீறி எழுவேன். எங்களை பார்த்து, கிண்டல் செய்தால், உரத்த குரலில், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

மக்கள்தான், ஜனநாயகத்தின் மிகப்பெரிய சொத்து; இதை, தற்போது மேற்குவங்க மக்கள் உணர்ந் துள்ளனர். விரைவில், நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும், இதை உணரும்நேரம் வரும் என்று மம்தா தெரிவித்தார் .

Leave a Reply