பாஜக மதவாத சக்தி என்பதை மக்கள் நம்ப மாட்டார்கள் மதவாத சக்திகள் ஆட்சிக்கு_வருவதை தடுக்கவே, காங்கிரஸ் அரசை ஆதரிப்பதாக சாமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் சமிபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பாரதிய ஜனதாவின் மீது இப்படி குற்றம் சுமத்துவதை மக்கள்

நம்பமாட்டார்கள் என பாஜக பதிலடி தந்துள்ளது .

டீசல்விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு போன்றவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி கொண்டது. அப்போது சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், மதவாத சக்திகளின் ஆட்சியை தடுக்கவே தாம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய_முற்போக்குக் கூட்டணிக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் பதிலடி தந்துள்ளார் , இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; பாரதிய ஜனதா மதவாத கட்சி என முலாயம்சிங் குற்றம் சுமத்தியிருப்பதை மக்கள் நம்பமாட்டார்கள். உ.பி.,யில் சமாஜ்வாடிக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இனக்கலவரங்கள் நடப்பதை யாராலும் மறுத்து விட முடியாது. உபி,.யில் தற்போது ஆட்சிக்குவந்த ஆறு மாதங்களிலேயே நான்கு இடங்களில் இனக்கலவரம் நடந்துள்ளது. இதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply