மன்மோகன் சிங்கை டிஸ்மிஸ் செய்யகோரி  தமிழக கவர்னரிடம் தமிழக பாஜக மனு  பிரதமர் மன்மோகன்சிங்கை டிஸ்மிஸ் செய்யகோரி தமிழக கவர்னர் ரோசய்யாவிடம் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் இன்று மனுஒன்றை தந்தனர் . இந்தமனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன், மாநில துணை தலைவர்கள் தமிழிசை சவுந்தர ராஜன், எம்எஸ்.ராமலிங்கம், மாநில செயலாளர் வானதிசீனிவாசன் உள்ளிட்டோர் இன்று காலை சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று மனுவை அளித்தனர்.

நிலக்கரி ஊழல், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, விலைவாசி உயர்வு போன்றவற்றிற்கு பொறுப் பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி தலையிட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தமனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply