ஊழல்லில் கொழிக்கும் பணத்தில் பிரதமருக்கும் பங்கு; நரேந்திர மோடி  நாடு பொருளாதார பின்னடவைச் சந்தித்ததற்கு பிரதமர் மன்மோகன்சிங் தான் முக்கிய காரணம், ஊழல்லில் கொழிக்கும் பணத்தில் பிரதமருக்கும் பங்குசெல்வதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார் ,

குஜராத்தின் சூரத்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது ; முக்கிய விஷயங்களில் பிரதமர் மவுனமாக இருப்பதால் , ஊழல்கள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் , நாடும் அழிவுப்பாதையில் பயணிக்கிறது என்றார்.

நாட்டின் முக்கியப்பதவியில் உள்ள ஒருவர் மவுனம் சாதிக்கும் ஒரு நிலை உலகில் வேறு_எந்த நாட்டிலும் இல்லை, தற்போதைய சூழ்நிலையில் கேப்டன் இல்லாத கப்பலைப் போன்று நாடு உள்ளது . பல்வேறு ஊழல் பணத்தில் இருந்து பிரதமர் தனது சொத்துமதிப்பை அதிகரித்து கொண்டுள்ளதாக நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply