பா.ஜ.க  ஆட்சிக்கு வந்தால் எல்லையோர பகுதிகளில்  பாதுகாப்பு   பலப்படுத்தபடும்  காங்கிரஸ் கட்சி அரசியல் நோக்கத்துக்காக சி.ஐ.,யை தொடர்ந்து பயன் படுத்துவதால், அதன் தலைமை அலுவலகத்தை, காங்கிரஸ்சின் தலைமை அலுவலகத்துக்கு இடம் மாற்றம் செய்துவிடலாம் ‘ என பாரதிய ஜனதா கடுமையாக குற்றம் சாடியுள்ளது.பாரதிய ஜனதா வின், மூன்று நாள் தேசிய செயற் குழு கூட்டம், சூரஜ்கண்ட்டில் நேற்று

தொடங்கியது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

தொடக்க உரை ஆற்றிய பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி தெரிவித்ததாவது : அசாமில் நடப்பது மதக் கலவரங்களை போன்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மை அது வல்ல; வங்க தேசத்தில் இருந்து இந்தியாவுக்குள்_நடக்கும் ஊடுருவல் தான் பிரச்னை. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தால்தான், நாட்டின் எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி அந்தபகுதிகளில் முறையான வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

Leave a Reply