வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம் சுற்றுப்பயணத்தில் இருக்கும் முதல்வர்  அசாமில் காண மழையின் காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது , 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர் , ஆனால் முதல்வர் தருண் கோகோய்யோ ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அசாமில், கடந்த பத்து நாட்களாக பலத்த மழை கொட்டுகிறது. பிரம்மபுத்ராவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது . 20லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து, தண்ணீரில் தத்தளிககின்றனர். வெள்ளப்பெருக்கிற்கு, இதுவரை 18 பேர், பலியாகி உள்ளனர்; பலரை காணவில்லை. ஆனால் மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் , காங்கிரஸ் முதல்வர் தருண் கோகோய்யோ , 6நாள் சுற்றுப் பயணமாக, ஜப்பானுக்கு சென்றுள்ளார். வரிவிதிப்பு முறைகள், ஜப்பானில் எப்படி நடை முறைப்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய அவர் சென்றுள்ளாராம் , சரி சென்றது தான் சென்றார் அந்த நாட்டு அரசு எப்படி ஆபத்து காலங்களில் செயல்படுகிறது என்பதை பார்த்து விட்டு வந்தால் நன்று

Leave a Reply