நாங்கள் ஆட்சிக்குவந்தால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என பா.ஜ.க அறிவித்திருப்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்க பேரவை வரவேற்றுள்ளது.
.
இதுகுறித்து பா.ஜ.க வின் தமிழ் மாநில தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணனுககு தமிழ்நாடு வணிகர் சங்கங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் அனுப்பியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது :
நாங்கள் ஆட்சிக்குவந்தால் சில்லரைவர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என பா.ஜ.க அறிவித்திருப்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவை வரவேற்கிறது. நாட்டின் நலனுக்கோ விவசாயிகளுக்கோ இது உகந்ததல்ல என தெளிவுபடுத்திருப்பதையும் நாங்கள் மனமுவந்து பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்