பிரதமர் செய்த இரண்டு தவறு ;நரேந்திர‌மோடி பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தின் மூன்றாம் நாள் கூட்டம் நடந்துவருகிறது. குஜராத் முதல்வர் நரேந்திர‌மோடி இதில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது , மத்தியில் ஆளும் ஐக்கிய_முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் இரண்டு முறை பிரதமராக மன்மோன் சிங் இருந்துள்ளார்.

அவர் செய்த இருதவறு , முதன் முதலாக பிரதமர் ஆனதும் அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது ஒரு தவறு, இரண்டாவது முறையாக பிரதமர் ஆன பிறகு , சில்ல‌ரை வர்த்தகத்தில் நேரடி_அன்னிய முதலீட்டினை அனுமதித்தது இரண்டாவது தவறு. இது தான் அவரது சாதனை.

குஜராத் சுற்றுலாத் துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது . ஆனால் உலக தரத்திற்கு இணையாக இந்தியாவால் சுற்றுலாத துறையில் வரமுடியவில்லை. நாட்டின் எல்லா ஊழல் களையும் கண்டும் காணமால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருகிறார் . இதற்கு பிரதமர்தான் உரியபதில் தரவேண்டும். விவசாயிகளுக்கு எதிரானகொள்கையை காங்கிரஸ் அரசு மேற்கொள்கிறது என்று அவர் தெரிவித்தார் .

Leave a Reply