ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது முழு ஆட்சி காலத்தையும் பூர்த்தி செய்யாது ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு தனது முழு ஆட்சி காலத்தையும் பூர்த்தி செய்யாது என்று பா. ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க,.வின் தேசிய செயற் குழுக் கூட்டம் ஹரியாணாவில் உள்ள

சூரஜ்குண்டில் கடந்த மூன்று நாட்களாக நடந்தது.

இதில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது : மத்திய அரசில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறித்து என்னிடம் கேட்டால், இந்தஅரசு 2014ம் ஆண்டு வரை நீடிக்காது . அதற்குள் கவிழ்ந்து விடும் என நம்பிக்கையுடன் தெரிவிப்பேன். ஒரு நோயாளியை போன்று நோய்வாய்ப் பட்டுள்ள மத்திய அரசு, அவசர சிகிச்சைபிரிவில் ஆக்ஸிஜன் பொருத்திய நிலையில் உள்ளது.

காங்கிரஸ் அரசு சி.பி.ஐ,யுடன் நிலையான கூட்டணி அமைத்துள்ளது. 2014ம் ஆண்டுவரை ஆட்சியை தொடர்வதற்கு சி.பி.ஐ. உதவும்.

பிரதமராக இருந்துகொண்டு செயற்படாத மனிதராக மன்மோகன்சிங் இருக்கிறார் என்பதை தெரிவிக்கும் போது நான் மிகவும் மனம்வருந்துகிறேன் என்று தெரிவித்தார்

Leave a Reply