முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது முத்துப்பேட்டையில் 20வது ஆண்டு விநாயகர் விசர்ஜன ஊர்வலம், இரண்டாயிரம் போலீஸார் பாதுகாப்புடன் அமைதியாக நேற்று நடந்தது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி

தில்லைவிளாகம், அரவங்காடு, செம்படவன்காடு உள்பட, 19 இடங்களிலிருந்த சிலைகள், சிவன்கோவிலிருந்து புறப்பட்டது. ஊர்வலத்தை சிதம்பர தேவர் தொடங்கி வைத்தார். பா.ஜ., மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இந்து சமய நல்லிணக்க பொறுப்பாளர் தங்கராஜ், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். சாம்பவான் ஓடை தர்க்கா, ஆசாத் நகர், பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே பாமனி ஆற்றுக்கு சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாட்டை திருச்சி மண்டல ஐ.ஜி., அலெக்ஸாண்டர் மேற்பார்வையில், எஸ்.பி.,க்கள் சேவியர் தன்ராஜ், அனில்குமார் கிரி மற்றும், 85 டி.எஸ்.பி.,க்கள் உள்பட, இரண்டாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது

 முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது

 முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது

Tags:

Leave a Reply