எல்கே. அத்வானியை   கொலைசெய்ய முயன்றவர்களை நெருங்கும் காவல் துறை பா. ஜ.க,. மூத்த தலைவர் எல்கே. அத்வானியை மதுரை அருகே பைப் வெடிகுண்டு மூலம் கொலைசெய்ய முயன்றவர்கள் சென்னையில் பதுங்கி உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஊழலுக்கு எதிரான ரதயாத்திரையை சென்ற ஆண்டு அத்வானி

மேற்கொண்டார். நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் செய்த அத்வானி, மதுரைக்கும் வந்தார். மதுரையில் ரதயாத்திரை மேற்க்கொண்டபோது ஆலம் பட்டி ஓடைப் பாலத்தில் சக்தி வாய்ந்த பைப்வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை சிபிசிஐடி. சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணைசெய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மதுரை நெல் பேட்டையை சேர்ந்த பழவியாபாரி அப்துல்லா, ஆட்டோ டிரைவர் இஸ்மத் போன்றோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

மதுரையைச்சேர்ந்த பொலிஸ் பக்ருதீன், முகம்மது ஹனிபா, மாலிக் உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இவர்கள் மூன்று பேரும் சென்னையில் பதுங்கி உள்ளதாக மதுரை சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும். அந்தத்தகவலின் அடிப்படையில் மதுரை காவல்துறையினர் 3 நாள்களாக சென்னையில் முகா மிட்டு அவர்களை தேடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளன.

Leave a Reply