சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை  பாஜக  தொடர்ந்து  எதிர்க்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது எனும் முடிவை பாஜக தொடர்ந்து எதிர்க்கும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு கருத்து தெரிவித்துள்ளார்:

எவ்விதமான வணிகத்திலும் அன்னியநேரடி முதலீட்டை நாங்கள்

ஏற்க்க மாட்டோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக போராடுவோம்.

இந்தியவில் உள்ள சிறு வர்த்தகர்களை அன்னிய நேரடி முதலீடு அழித்து விடும். லட்ச கணக்கான சிறுவர்த்தகர்கள் தங்கள் தொழிலை இழக்க வேண்டிவரும் . பிறகு பொருளுக்கான விலையை தீர்மானம் செய்யும் சக்தியாக அவர்கள் உருவெடுத்து விடுவார்கள்.

இந்த முடிவை நம்மீது திணிக்க வேண்டும் என்று அமெரிக்கா முயல்கிறது . அந்தமுயற்சியை நமது அரசோ கைநீட்டி வரவேற்கிறது. விரைவிலேயே தேர்தல் வர வாய்ப்புகள் உள்ளன. அதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணி தன்னை பலப்படுத்திக் கொள்ளும். தேர்தல் வரும் போது, பல புதியகட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என தெரிவித்தார்.

Leave a Reply