திக்விஜய் சிங்கிற்கு எதிராக, பாஜக   தலைவர் நிதின் கட்காரி நீதிமன்றத்தில்  அவதூறு வழக்கு  காங்கிஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங், பாரதிய ஜனதா தலைவர்

நிதின் கட்காரிக்கும், காங்கிரஸ் கட்சி எம்.பி., அஜய் சன் செட்டிக்கும் இடையே, வர்த்தகதொடர்பு இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார் , இதை எதிர்த்து, திக்விஜய் சிங்கிற்கு எதிராக, நிதின் கட்காரியின் சார்பில், டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் , நேற்று அவதூறுவழக்கு தொடரப்பட்டது.

கட்காரியின் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பிங்கிஆனந்த், அஜய் சன் செட்டிக்கும், கட்காரிக்கும், மறைமுகமாகவோ, நேரடியாகவோ எந்த வித வர்த்தகத் தொடர்பும் இல்லை. பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரியின் புகழுக்கு களங்கம் உருவாக்கும் உள்நோக்கத்துடன்தான், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply