கோவையை தலைமை இடமாக  கொண்டு புதிய 24 மணி நேர செய்தி சேனல் ஒன்று உதயமாகி உள்ளது. பாரதிய ஜனதா  சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த செய்தி சேனலுக்கு ‘லோட்டஸ் டிவி’ என பெயரிடபட்டுள்ளது . அக்டோபர் 11ம் தேதி முதல் இந்த தொலைக் காட்சி உலகம்மெங்கும்  ஒளிபரப்பை துவங்கும்  என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

செய்திகளுடன்  இளைஞர்களையும், ஆன்மீகவாதிகளையும்  கவரும் வண்ணம் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களும் இதில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஒளிபரப்பாக www.lotusnews.tv இணையத்தளத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

லோட்டஸ் டிவியில் சக்தி கொடு, இப்படிக்கு நான், ஒரு கோவில் ஒருகதை, நவீனம் நாகரீகம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.

நாட்டில் நடைபெறும் சமூக அவலங்கள் இளைஞர்கள் விவாதிக்கும் நிகழ்ச்சி சக்தி கொடு. இதனை அருண்பிரசாத் தொகுத்து வழங்குகிறார். இளைஞர்கள் அனைவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

‘இப்படிக்கு நான்’ என்ற நேர்காணல் நிகழ்ச்சி தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற மனிதர்களை உலகிற்கு அறிமுகம் செய்கிறது இப்படிக்கு நான். பிரபலமான மனிதர்களை பேட்டி காண்கிறார் சரவணராம்குமார்.

இந்தியாவில் உள்ள பிரபல கோவில்களைப் பற்றியும், அவற்றின் புராணங்களைப் பற்றியும் தெரிவிப்பதுதான் ‘ஒரு கோவில் ஒரு கதை’ ஆர்.ஜி. லட்சுமி நாராயணன் இதனை தொகுத்து அளிக்கிறார்.

இன்றைய இளைய சமுதாயத்தினர் நவீனம் பற்றியும் நாகரீகம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி ‘நவீனம், நாகரீகம்’.

உலகில் மறைந்து கிடக்கும் அதிசயங்களையும், விடைகாண முடியாத சூட்சுமங்கள் பற்றியும் அலசுகிறது ‘எட்டாம் அறிவு’ நிகழ்ச்சி. பால்வீதி மண்டலம், பூகோளம், சரித்திரம், அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறியாத செய்திகளைத் தருகிறது.

‘சரித்திரத்தின் சரித்திரம்’ நிகழ்ச்சியில் வரலாற்று நாயகர்களின் சரித்திரங்களையும், அவர்கள் சந்தித்த சாதனைகளையும், சோதனைகளையும் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்கிறது.

இதன் செய்தி ஆசிரியராக சத்தியம் தொலைக்காட்சியில் பணியாற்றிய மணிமாறன் பொறுப்பேற்றுள்ளார்.

Tags:

Leave a Reply