தெலுங்கானாவை   சேர்ந்த காங்கிரஸ் எம்பி.,க்கள் மற்றும்,  அமைச்சர்கள்  பதவியை ராஜினாமா செய்யவேண்டும் பிரதமர் மன்மோகன்சிங், இந்த மாதம் ஆந்திராவில் சுற்றுப் பயணம் செய்கிறார் . அதற்கு முன்பாக தனிதெலுங்கானா விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிடவேண்டும்’ என்று ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் பிரபாகர் கோரிக்கை விடுத்துள்ளர்

பிரதமர் இந்த மாத இறுதியில் ஆந்திராவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அவரது வருகைக்குமுன்பாக, தெலுங்கானா பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் எம்பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமாசெய்து, பிரதமருக்கு நெருக்கடி தர வேண்டும். தெலுங்கானா விஷயத்தில் உண்மையிலேயே அவர்களுக்கு அக்கறை இருந்தால், கட்சி மேலிடத்திற்கு நெருக்கடி தர வேண்டும். பிரதமரின் வருகைக்கு முன்பாக தெலுங்கானா விஷயம் குறித்து, அறிக்கை வெளியிட நிர்ப்பந்திக்க வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகையை எதிர்த்து, எவ்வகையான போராட்டங்களை நடத்துவது என்பது குறித்து, பா.ஜ.க விரைவில் முடிவுசெய்யும். என்று பிரபாகர் கூறினார்.

Leave a Reply