சோனியா காந்தி   குஜராத்தில் மக்களிடையே பேசுவதற்கு பயப்படுகிறார் ; நரேந்திர மோடி சோனியா காந்தி தங்களது சாதனைகளாக சொல்லிக்கொள்வதற்கு எதுவும் இல்லாமல் , குஜராத்தில் மக்களிடையே பேசுவதற்கு பயப்படுகிறார் என நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார் .

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி இது குறித்து மேலும் தெரிவித்ததாவது. சோனியா பொதுக் கூட்டங்களில் அர்த்தம் இல்லாமல் பேசி வருகிறார். பெரியளவில் விளம்பரம் தேடிக் கொள்வதை தவிர்த்து நிதானமாக அவர் பேசிவருகிறார். காங்கிரஸ் கட்சியினர் குஜராத்தில் பேசுவதற்கு பயந்து மிகநிதானமாகவும் பேசுகிறார்கள் .

மக்களுக்கு எதிராக எதாவது தவறாக பேசிவிட்டால், கட்சிக்கு எதிராக அது மாறிவிடுமே என பயந்து அவர்கள் அளந்துபேசுகிறார்கள். 2009-ல் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சிக்குவந்தால், 100 நாளில் விலைஉயர்வை கட்டுப்படுத்துவோம் என்றார்கள் . ஆனால் அதை நிறை வேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றார் .

Leave a Reply