டிஎல்எப்.பிடம் இருந்து மிக குறைந்த விலைக்கு சொத்துக்களை  வாங்கிய ராபர்ட் வதோரா சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதோராவின் மீது சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் புகாரை தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது;சோனியா காந்தி மருமகன ராபர்ட் வதோரா,

முன்னணி நிறுவனமான டிஎல்எப்.பிடம் இருந்து மிக குறைந்த விலைக்கு சொத்து வாங்கியுள்ளார். டிஎல்எப். நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் தங்கள் சொத்துக்களை மிககுறைந்த விலைக்கு வதேராவிடம் விற்றுள்ளது.

அதுவும் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சத்துக்கு வழங்கியிருக்கிறது. மேலும் பணமும் வழங்கியிருக்கிறது. இந்த சொத்துக்களை ராபர்ட்வதேதா தனது தாயாரின் பெயரில் இருக்கும் நிறுவனங்களுக்காக வாங்கியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளார் . இதில் பலகோடி முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்க்கான பத்திர ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன என்றார்.

Tags:

Leave a Reply