மோடியின் வெற்றி அணி வகுப்பை தடுத்து நிறுத்துவது எளிதான ஒன்றல்ல குஜராத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மோடி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது என சிவசேனா தலைவர் பால்தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தெரிவித்திருப்பதாவது :-

மோடியின் தலைமையில் குஜராத் கடந்த பத்து வருடத்தில் வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. எனவே, மோடியின் வெற்றி அணி வகுப்பை தடுத்து நிறுத்துவது எளிதான ஒன்றல்ல .

குஜராத் கலவரத்தின் போது, மோடியை மரணவியாபாரி என காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியது . ஆனால் நடந்தது என்ன? தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெறும் 55 இடங்களையே பிடிக்க முடிந்தது . மோடி தலைமையிலான பாரதிய .ஜனதா 121 இடங்களை பெற்றது.

தற்போது குஜராத்தில் நடை பெற்ற பேரணியில் பேசிய சோனியாகாந்தி, ஒருமுறை கூட மோடியின் பெயரை குறிப்பிடவில்லை. இது தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ்சின் தோல்வியை குறிக்கும் அறிகுறியாகும் என்று
பால்தாக்கேரே கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply