குஜராத்தில் நரேந்திர மோடியே மீண்டும் வெற்றி பெறுவார் குஜராத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் வெற்றி பெறுவார் என்றும் , 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவார் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

133 இடங்களையும் கைப்பற்றுவார் என தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்பு நடத்திய லென்ஸ் ஆன் நியூஸ் நிறுவனத்தின் கருத்து கணிப்ப்பு தெரிவிக்கிறது.

குஜராத்தில் இருக்கும் 52 சட்டமன்ற தொகுதிகளில் 7,294 வாக்காளர்களிடம் சென்ற மாதம் 2 மற்றும் 28ம் தேதி அன்று நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன. கடந்த 2007ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. கிடைத்த வாக்கு சதவிகிதத்தை விட தற்போது ஒருசதவிகிதம் அதிகரித்துள்ளது . மேலும் பாஜக 16 இடங்களை கூடுதலாக கைபற்றும் என்றும் காங்கிரஸ் கட்சி16 இடங்களை இழக்கும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன .

அதே நேரத்தில் பா.ஜ.க,விலிருந்து பிரிந்து சென்ற கேசுபாய் பட்டேலால் பா.ஜ.க வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அந்த சர்வேயில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 குஜராத்தில் நரேந்திர மோடியே மீண்டும் வெற்றி பெறுவார்

Leave a Reply