தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர், சரத் பவாருடன், நான் வர்த்தக தொடர்பு வைத்துள்ளேன் என்பது நிரூபிக்கப்பட்டால், அரசியலை விட்டே விலகத்தயார், மேலும் எனது சொத்துக்களையும் தானமாக கொடுத்து விடுவேன்,” என்று பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார். .

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலில், பெரும்பான்மையை பெறவேண்டும் என்பதே, பா.ஜ.க,.வின் லட்சியம். போதுமான இடங்களை பிடித்த பிறகு பிரதமர்வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவுசெய்யப்படும் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் பலர் .பாஜக வில் உள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் அதில்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர், சரத்பவாருடன், நான் வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பதாக , காங்கிரசாரும், ஊடகங்களும் குற்றம் சுமத்துகின்றன . நான் அவர்களுக்கு சவால்விடுகிறேன்; இதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத்தயார். எனது அனைத்து சொத்துக்களையும் தானமாக வழங்கி விடுவேன் என்று நிதின் கட்காரி தெரிவித்தார் .

Leave a Reply