பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்கு சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று, சோனியாகாந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அகமதாபாத் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசியதாவது:-

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என கூறிய தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியதா? அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு விலைவாசிதான் குறைந்ததா? சோனியா காந்தி ராஜ்கோட்க்கு வந்த போது, பண வீக்கத்தை பற்றி எதுவும் பேசவில்லை. இது ஒரு மோசடி இல்லையா? எனவே விலைவாசி விவகாரத்தில் நாட்டு மக்களை ஏமாற்றிய சோனியாகாந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply