மன்மோகன் சிங் குஜராத்  தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரா ? பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ததாக கூறிக்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை எதிர்த்து குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரா என அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

குஜராத் மாநிலத் தேர்தலையொட்டி அகமதாபாத்தில் தீவிர தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது.

நீங்கள் சாலை போடுகிறீர்கள். நானும் கூட சாலை போடுகிறேன். நீங்கள் கால் வாய் வெட்டுகிறீர்கள். நானும்கூட கால் வாய் வெட்டுகிறேன். நீங்கள் மருத்துவ மனை கட்டுகிறீர்கள். நானும் மருத்துவமனை கட்டுகிறேன். அதை எல்லாம் மக்களை பார்க்கவிடுவோம். யார் சிறப்பாக செய்துள்ளார்கள் என்பதை அவர்களே முடிவுசெய்யட்டும்.

பிரதமர் மன்மோகன் சிங் குக்கு நான் சவால் விடுகிறேன். குஜராத் பேரவைதேர்தலில் என்னை எதிர்த்து அவரால் போட்டியிட முடியுமா?

என்னுடன் நேரடி யாக போட்டியிட காங்கிரஸ காரர்கள் விரும்பவில்லை. அவர்கள் வெறும் வாய்ப் பேச்சால் மாயா ஜாலம் காட்டுகிறார்கள்.

நான் அவர்களை எச்சரிக்கிறேன். நீங்கள் குஜராத்தின் மீது சவாரி செய்யலாம் என்று நினைக்காதீர்கள். டெல்லி சுல்தான் களின் காலம்மெல்லாம் கரையேறி போய்விட்டது என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply