வெளிநாடுவாழ் இந்தியர்களும் இந்திய தேர்தல்களில் பங்கு கொண்டு  வாக்களிக்க  வகை செய்யப்பட வேண்டும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் இந்திய தேர்தல்களில் பங்கு கொண்டு வாக்களிப்பதற்கு வகை செய்யப்பட வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐநா. பொதுச்சபை கூட்டத்தை பார்வையிட அத்வானி தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழு நியூயார்க்குக்கு சென்றுள்ளது. இந்நிலையில் நியூஜெர்சி பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் கூட்டத்தில் அத்வானி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது; வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேர்தல்களில் பங்கு கொண்டு வாக்களிக்கவே விரும்புகிறார்கள். அதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர் . இந்தியாவை பூர்வீகமாக கொண்டு வெளி நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் ஒட்டுரிமை பெறவேண்டும் என்பதே எனது விருப்பம் .

இதுஒரு நல்ல முயற்சியாகவே இருக்கும். இந்திய , வெளிநாட்டு சட்டங்களில் மாற்றங்கள் உள்ளபோது மட்டுமே இதை நம்மால் கொண்டுவர முடியும்.

இந்தியாவில் தேர்தல்கமிஷன் தன்னாட்சியுடனும், இராணுவம் அரசியல் அமைப்பு சட்டபபடியும் செயல்படுவதனால்தான் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது என மறைந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கூறியிருப்பதையும் இங்கு ஞாபகப்படுத்துகிறே ன் என்றார் அத்வானி.

Leave a Reply