உத்தரகண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாரதிய ஜனதாவினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தந்துள்ளனர் . தெஹ்ரி மக்களவைதொகுதி உறுப்பினரான விஜய் பகுகுணா மாநில முதல்வரானதையடுத்து தனது எம்பி பதவியை

ராஜினாமாசெய்தார். இந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது . இந்ததொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விஜய் பகுகுணாவின் மகன் சாகேத் பகுகுணா போட்டியிடுகிறார் .

தனது மகனுக்கு ஆதரவாகதீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜய்பகுகுணா . மானிய விலையில் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி தந்தார் . இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று மாநில பாரதிய ஜனதா தலைவர் பிஷன்சிங் சுபால் குற்றம் சுமத்தியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு தாக்கல்செய்தார். முதல்வரின் அலுவலகம் தேர்தல் அலுவலகமாக மாற்றிவிட்டதாக விஜய் பகுகுணா மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

Tags:

Leave a Reply