ஊழலை ஊக்குவிக்கும் விதமாக  அரசு எந்திரங்களை  பயன்படுத்தினால் பேரழிவுதான்  ஏற்படும் சிபிஐ. மற்றும் ஊழல் தடுப்பு அமைப்புகளின் மாநாடு டெல்லியில் நடந்தது . இதில் பங்குகொண்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், ‘ஊழல் தடுப்பு சட்டத்தை திருத்த அரசு திட்டமிட்டிருக்கிறது . அவ நம்பிக்கை மற்றும் எதிர் மறையான தன்மைகளுக்கு எதிராக கவனம்செலுத்தவில்லை ஊழல்களை தடுப்பதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலன் தராது ‘ என்றார்.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி கூறுகையில், ‘ஊழலை ஊக்குவிக்கும் விதமாக அரசு எந்திரங்களை பயன்படுத்தினால் பேரழிவுதான் ஏற்படும்’ ராபர்ட் வதேராவின் மீது கெஜ்ரிவால் கூறிய குற்றச் சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது , இந்த வழக்கின் உண்மைகள் நீதி மன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என ஜோஷி கூறினார்.

Tags:

Leave a Reply