குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க   மகத்தான வெற்றி பெறும் குஜராத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலி்ல் பெருமளவுவெற்றி பெறுவேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் . குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்ற மாதம் தனது விவேகானந்தா விகாஸ் யாத்திரையை மோடிதொடங்கினர் .

இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது , குஜராத்தின் வளர்ச்சி மீதுதான் எனது முழு கவனம் உள்ளது . குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களுக்கு சேவை செய்வதையே நான் விரும்புகிறேன். டில்லி மீதல்ல. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மகத்தான வெற்றியைபெறும் . 2007-ம் ஆண்டு தேர்தலை விட 2012-ம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் நான் பெருவாரியாக வெற்றிபெற்று நான் மீண்டும் முதல்வர் ஆவேன் என்று கூறினார்.

Leave a Reply