ம.பி, கொள்ளைக் காரர்களை விட,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி படு மோசமானது ம.பி,.யில் இருக்கும் கொள்ளைக் காரர்களை விட, ஐக்கிய முற்போக்கு கூட்டணி படு மோசமானது, நம் வயித்துக்குள், ஆல்கஹாலை நிரப்புவதற்கு பதிலாக அதனை நம், வாகனத்தின் பெட்ரோல்டேங்கில் நிரப்பினால், கச்சா எண்ணெய் இறக்கு மதியை வெகுவாக குறைக்கலாம்” என்று , பாரதிய ஜனதா , தலைவர் நிதின்

கட்காரி கருத்து தெரிவித்துள்ளார் .

சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்தநாளை முன்னிட்டு , போபாலில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது , காங்கிரஸ் கட்சி தலைமையிலான,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் பட்டியல் மிகபெரியது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் , 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல், நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடுசெய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல், “2ஜி’ அலைவரிசை ஒதுக்கீட்டில், 1.76 லட்ச கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் என்று ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .

நாம் இதற்குமுன், இப்படி கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம். இந்த முறை கேடுகளை பற்றி, நான் கூறவில்லை ; மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தான் கூறியுள்ளது . லஞ்ச ஊழல் அதிகரிப்பினால் , பணவீக்கமும் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது.

இது குறித்து எல்லாம், மத்தியில் ஆளும் காங்கிரசுக்கு எந்தகவலையும் இல்லை. பெட்ரோல் , டிசலை சார்ந்திருக்காமல் மாற்று வழியாக, எத்தனால் கலந்த பெட்ரோலை பயன் படுத்த வேண்டும். பிரேசில் நாட்டில் இந்த நடைமுறை பின்பற்ற படுகிறது. நம் வயித்துக்குள், ஆல்கஹாலை நிரப்புவதற்கு பதிலாக அதனை நம், வாகனத்தின் பெட்ரோல்டேங்கில் நிரப்பினால், கச்சா எண்ணெய் இறக்கு மதியை வெகுவாக குறைக்கலாம் என்றார்.

Leave a Reply