நரேந்திர மோடிக்கு  இங்கிலாந்தைத் தொடர்ந்து அமெரிக்காவும் பச்சைக்கொடி! குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு இனி விசா வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அமெரிக்காவும் மறைமுகமாக தெரிவித்துள்ளது.

2002 ம் ஆண்டு குஜராத் கலவரம் முன் கூட்டியே திட்டமிட்ட ஒன்று

என்ற பொய் குற்றச்சாட்டின் கீழ், நரேந்திர மோடியை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக புறக்கணித்து வந்தன.

இந்த நிலையில், பிரிட்டன் – குஜராத் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதுவர் நேரடியாக குஜராத்சென்று மோடியை சந்திப்பார் என்று நேற்று பிரிட்டன் அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியது.

குஜராத்தில் சட்டமன்றதேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் பிரித்தானியாவின் பிரிட்ட னின் இந்த அறிவிப்பு மோடிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு நுழைய மோடிக்கு இருந்துவந்த விசா தடையும் இனிதளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க பொதுவிவகாரங்களுக்கான அமைச்சர் மைக்ஹாமர் கூறுகையில், அமெரிக்க குடியேற்ற சட்ட திட்டப்படி, திறமை, தகுதி, நன்னடத்தை உடைய எந்த வொரு இந்தியருக்கும் விசா வழங்குவதில் தடையில்லை. இதுதொடர்பில் அவர்கள் விண்ணப்பித்தால் விசாவழங்குவது உறுதி என்று தெரிவித்துள்ளது. இதனால் மோடி விண்ணப்பித்தால் அவரும் அமெரிக்கா செல்ல விசாகிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

Leave a Reply