இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி தருவதால் இந்தியாவுக்கே பாதிப்பு உருவாகும் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி தருவதால் இந்தியாவுக்கே பாதிப்பு உருவாகும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி தருவதன் மூலம் நம்நாட்டுக்கு பாதிப்பு உருவாகும் என்ற அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டுள்ளது

இலங்கைக்கு இராணுவமே தேவைய ற்ற நிலையில் இந்தியாவில் அவர்களுக்கு பயிற்சி தருவதன் மூலம் இலங்கையில் எஞ்சி உள்ள தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது .

மேலும் பயிற்சியை நிறைவு செய்த பிறகு , நம் நாட்டுக்கு பாதிப்பை_ஏற்படுத்தும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது . எனவே இதனை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:

Leave a Reply