ராபர்ட் வதேராவை காப்பாற்ற  மன்மோகன் சிங்கின் மொத்தநிர்வாகமும் களத்தில் இறங்கியுள்ளது சோனியா காந்தியின் மருமகன ராபர்ட் வதேராவை காப்பாற்ற மன்மோகன் சிங்கின் மொத்தநிர்வாகமும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகர் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது ; சோனியா மருமகன ராபர்ட் வதேரா மீது ஒரு சில குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கின் மொத்த நிர்வாகமும் அவரை காப்பாற்றதேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது .

இவரது மிகபெரிய சுரண்டலை குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி டெல்லி சுல்தான் அரசு பயந்துள்ளது. சோனியா காந்தியின் மருமகனை காபாற்ற அவர்கள் ஏதாவது செய்தாக வேண்டும். இதற்காக மன்மோகன்சிங் அரசின் மொத்த நிர்வாகமும் களத்தில் இறங்கியுள்ளது .

நாட்டில் குண்டு வெடிக்கிறது. ஒரு இயற்கை பேரழிவு நடக்கிறது., பலர் கொல்லப் படுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் குரல்கொடுக்க ஒரு போதும் அரசின் ஒட்டு மொத்த நிர்வாகமும் வந்ததில்லை. ஒரேஒரு செய்தித் தொடர்பாளர் மட்டுமே வந்துபேசுகிறார். அத்துடன் அந்த பிரச்சினை முடிவது ஏன்?

அனால் இப்போதோ அனைத்து அனைத்து நிர்வாகமும் களத்தில் இறங்கியுள்ளது இதுவே முதல் முறை, இந்த மருமக பிள்ளையை காப்பாற்றுவதர்க்கு அரசின் அனைத்து அமைச்சர்களும் களத்தில் இறக்கிவிடப் பட்டுள்ளனர்.என்று அவர் கூறினார்.

Leave a Reply