காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக நலன் பாதிக்கபடுவதை அனுமதிக்க முடியாது காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படுவதை அனுமதிக்க_முடியாது. இதில் மாநில அரசியலை கைவிட்டு இரண்டு மாநிலங்களின் முதல்வர்களையும் அழைத்து சுமூகமுடிவு எடுக்க, பிரதமர் மன்மோகன்சிங் முயற்சி செய்யவேண்டும், என்று பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர்ராவ் கேட்டுக் கொண்டார்.

தமிழக பா.ஜ.க,.வின் மாநில செயற் குழுக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது . இதை தொடங்கி வைத்து கட்சியின் தேசியசெயலாளர் முரளிதர் ராவ் பேசியதாவது: பா.ஜ.க,க்கு அதிகமான சவால்கள் உள்ளன. ஊழல் அதிகமாகி விட்டது. இது நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது . ஊழலுக்கு எதிராக பாஜக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மிகதீவிரமாக போராடி வருகிறது.

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடிமுதலீடு வந்தால் நேரடியாக 5கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். 7% வேலைவாய்ப்பை வழங்கி வரும் சில்லரை வணிகம் கடுமையாக பாதிக்கும். காவிரிடெல்டா பகுதிகள், தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்கு மட்டும் அல்லாமல், நாட்டின் உணவு பாதுகாப்புககாகவும் உள்ளது. விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் ஆயிரக் கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் மாநில அரசியல் நலனை கருத்தில்கொண்டு பிரதமர் பாரபட்சமான முறையில் நடவடிக்கையை எடுத்துவருகிறார். கட்சி, மாநில அரசியலை_கைவிட்டு இரண்டு மாநில முதல்வர்களையும் அழைத்து பேசி சுமூகமுடிவு காண முயற்சி செய்யவேண்டும். காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக நலன் பாதிக்கபடுவதை அனுமதிக்க முடியாது என்றார்

Leave a Reply