தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ளது எனதரு காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த கர்நாடக எதிர்கட்சி தலைவர் சித்தா ராமைய்யா கருத்து தெரிவித்ததற்கு தமிழக பா.ஜ.க,. விவசாய அணி கண்டனம் தெரிவித்திருக்கிறது .

இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க.விவசாய அணித்தலைவர் கேவி.கண்ணன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக எதிர் கட்சி தலைவர் சித்தா ராமைய்யா தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டும் அதிகமாக உள்ளதாகவும், அதை உபயோகிக்காமல் , காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் அடம்பிடிப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்று உண்மைக்கு புறம்பான விஷயங்களை சொல்லி ஏற்கனவே கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்ரும் நிலந்து போய் உள்ள உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது அவரது பேச்சு.

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் பொறுத்தவரையில் 385 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 138 பகுதிகள் ஏற்கனவே 100 சதவீதம் தாண்டி நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. 37 பகுதிகளில் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நிலத்தடி நீர் எடுக்கப்பட்டுள்ளது. 105 பகுதிகளில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுள்ளது. 97 பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு என கருதப்பட்டு 70 சதவீத நீர் எடுக்கப்பட்டுள்ளது. 8 பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவில் ஏராளமான குளங்களும், ஏரிகளும், ஆறுகளும், சிறு பாசன வாய்க்கால்களும் உள்ளன. வாய்க்கால்களில் நீர் வந்தால்தான் நிலத்தடி நீர் மட்டும் உயரும். ஏற்கனவே நீரின்றி தவிக்கும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கர்நாடகஅரசு எதிர்க்கட்சி தலைவரின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது.

மழையையும், காவிரிநீரையும் நம்பி தமிழகத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் விதைக்கப்பட்ட நேரடி நெல், மேல்மழை இல்லாததாலும், காவிரி நீர் பெறப்படாததாலும் கருகிப்போகும் நிலையில் உள்ளன. இந்த ஆண்டு மொத்த விவசாயத்தையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர். இவையல்லாமல் தமிழகத்தில் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரையிலான அறிவிக்கப்படாத மின்வெட்டினால் நடவு செய்யப்பட்ட சமுதாய நாற்றங்கால்களும் காய்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை என கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply