முக்கிய முடிவுகளை எடுக்க   ஐ.மு, கூட்டணிக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளினுடைய நம்பிக்கையை இழந்து விட்டதால் முக்கிய முடிவுகளை எடுக்க அதற்க்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை என பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது . மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூட்டணி கட்சிகள் மற்றும் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. எனவே முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எந்த விதத்திலும் தார்மீக உரிமை கிடையாது என்றார். உரம், சர்க்கரை, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்டவற்றின் மீதான கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு ஒரு சில கட்சிகள் தங்கள் ஆதரவையும் வாபஸ்பெற்று வருகிறது. இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் இந்த மாதிரியான ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றார்.

Leave a Reply