கருணா நிதியின் பேச்சுக்கெல்லாம் யாரும் இப்போது மதிப்பு தருவதில்லை 356வது பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசைக் கலைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்த கருணா நிதியின் பேச்சுக்கெல்லாம் யாரும் இப்போது மதிப்பு தருவதில்லை என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது;

காவிரி_நீர் மீதான தமிழக உரிமையை நாங்கள் எந்த காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம். கர்நாடகத்தில் ஆளும் பாரதிய ஜனதா முதல்வரும், அங்கிருக்கும் தலைவர்களும் தமிழகத்துக்கு விட்டுத்தர தயாராகத்தான் இருக்கிறார்கள் .

ஆனால், எதிர்க் கட்சியான காங்கிரஸும், அங்கிருக்கும் சில மொழித்தீவிரவாத குழுக்களும் கர்நாடக அரசை மிரட்டி காவிரி நீரை திறந்து விடுவதை தடுக்கிறார்கள். அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் செயல்பட வேண்டி உள்ளது .

இந்தவிவகாரத்தில் எஸ்எம்.கிருஷ்ணா நடந்துகொள்ளும் விதம் மிகமோசமானது. ஒரு மத்திய அமைச்சராக இருந்துகொண்டு தமிழகத்தையும், கர்நாடகத்தையு ம் பிரிக்கும் வகையில் அவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். எஸ்எம்.கிருஷ்ணா வெளியுறவு துறை அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். அவர் உடனே அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இதில், கருணாநிதி 356பிரிவை பயன் படுத்தி கர்நாடக அரசைக் கலைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். நாங்கள் அவர்பேச்சுக்கு மதிப்பு தர தயாராக இல்லை. அவர் இன்று கலைக்கவேண்டும் என்பார். நாளைக்கே 356 பிரிவை பயன் படுத்துவது தவறு என எதிர்ப்பு தெரிவிப்பார். அவருடைய பேச்சுக்கெல்லாம் மதிப்புகொடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்

Tags:

Leave a Reply