தவறுசெய்தவர்களை மக்கள்  மன்னிக்கலாம் . ஏமாற்றியவர்களை மன்னிப்பர்களா? காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை தந்து , மக்களை ஏமாற்று வதை வழக்கமாக கொண்டுள்ளதாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க. சார்பில் நடந்த பேரணியில் இது குறித்து மேலும் அவர்

பேசியதாவது , ‘ஒருவர் தவறுசெய்தால் அவர்களை வேண்டுமானால் மக்கள் மன்னிக்கலாம் . ஆனால், தங்களை ஏமாற்றியவர்களை மக்கள் மன்னிப்பர்களா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் மக்களை ஏமாற்றி வருவது அனைவருக்கும் தெரியும். மகாராஷ்டிரவில் விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் தருவதாக, தேர்தலின் போது காங்கிரஸ் வாக்குறுதி தந்தது . ஆனால் ஆட்சிக்குவந்து நன்கு வருடங்களாகியும் இன்னும் அதுநடக்கவில்லை. மீண்டும் ஆட்சிக்குவந்தால் 100 நாட்களுக்குள் விலைவாசியை குறைப்பதாக 2009ல் வாக்குறுதி தந்தது . ஆனால் விலைவாசி உயர்ந்ததேதவிர, குறைந்தபாடில்லை . இது மோசடி இல்லையா?’

கிராமங்களில் வசிக்கும் நிலமற்ற ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இலவச நிலம் தருவதாகவும், நகரத்து ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவான வீடுகளை தருவதாகவும் குஜராத் காங்கிரஸ் தற்போது உறுதி தந்துள்ளது .ஆனால், இவை அனைத்தையும் எனது அரசு செய்துகாட்டும்’ என மோடி கூறினார்.

Tags:

Leave a Reply