அமித் ஷா  மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

குஜராத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது துளசி

ராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக விசாரணை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதாசிவம் மற்றும் ரஜன்கோகி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நவம்பர் 23 தேதி வரை அவர் கைது செய்யபட மாட்டார் என்று உத்தரவிட்டார். இதையடுத்து குஜராத் மாநிலத்திற்கு சென்ற அமித் ஷாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட 19 பேர் மீது புலனாய்வு துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 27 தேதியில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply