பிரதமர் வேட்பாளரை  முடிவுசெய்ய வேண்டியது, பா.ஜ.க.,வின்   தனிப்பட்ட உரிமை வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்வதில் , ஆர்எஸ்எஸ்.,க்கு, எந்த சம்பந்தமும் இல்லை,” என்று அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான, ராம்மாதவ் கருத்து தெரிவித்துள்ளார்

சமிபத்தில் பா.ஜ.க,.வின் ராஜ்யசபா எம்.பி.யும் பிரபல வழக்கறிஞரும்மான , ராம் ஜெத்மலானி, சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, “பா.ஜ.க,வின் அடுத்த பிரதம வேட்பாளராக, நரேந்திர மோடியை தேர்வுசெய்யலாம்; மோடியை பிரதமராக்க, ஆர்எஸ்எஸ்., தலைவர், மோகன் பாகவத்தும் சம்மதம் தெரிவித்துவிட்டார்’ என கருத்து தெரிவித்திருந்தார்.

ராம் ஜெத்மலானியின் கருத்துக்கு பதில் தரும் விதமாக , ஆர்எஸ்எஸ்., அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான, ராம்மாதவ் தெரிவித்ததாவது :அடுத்த வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.க,வின் பிரதமர் வேட்பாளர், யார் என்பதை முடிவுசெய்ய வேண்டியது, பா.ஜ.க,வின் தனிப்பட்ட உரிமை. அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், இது குறித்து முடிவு செய்யவேண்டும். இதுபோன்ற பிரச்னைகளை, பா.ஜ, க, வே முடிவு செய்யவேண்டும் என்பதில், ஆர்.எஸ்.எஸ்., உறுதியாக இருக்கிறது என்று ராம் மாதவ் கூறினார்.

Tags:

Leave a Reply