சில்லரை வணிகத்தில்  அன்னிய முதலீடு மத்திய அரசின் கருத்துக்கு பா. ஜ.க  எதிர்ப்பு  . சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கபபட்டால், விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும்’ எனும் மத்திய அரசின் கருத்தை , பா. ஜ.க கடுமையாக எதிர்த்துள்ளது .

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர், நிர்மலா சீத்தாராமன்

தெரிவித்ததாவது : சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடை அனுமதித்தால் , எந்த விதத்தில் விவசாயிகளுக்கு நன்மைகிடைக்கும் என்பதை, பாராளுமன்றத்தில் , மத்திய அரசு விளக்கவேண்டும்; விரிவான விவாதத்தையும் நடத்த வேண்டும்.ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது, விவசாயம் மற்றும் உற்பத்தி, சேவைப் பணிகளை உள்ளடக்கியது.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்க பட்டால், இந்தமூன்று துறைகளுமே காணாமல் போய்விடும். சுயதொழில் செய்பவர்கள், சிறு, குறு தொழில்களை செய்பவர்கள் அழிந்து விடுவர் எனவே, இதுகுறித்து, கமிட்டி ஒன்றை அமைத்து, விரிவாக ஆராயவேண்டும்.இன்சூரன்ஸ், பென்ஷன் துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிப்பது , வேறு விஷயம் . சில்லரை வணிகத்திலிருந்து அவை, முற்றிலும் வேறுபட்டது என்று நிர்மலா சீத்தாராமன் பேசினார்

Tags:

Leave a Reply