பாகிஸ்தானில் மைனாரிட்டிகள் மீது தொடரும்  காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள் பாகிஸ்தானில் மைனாரிட்டியாக வகித்து வரும் கிறிஸ்தவர்கள் , இந்துக்கள் மீது தொடர்ந்து காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது தொடர்தாக்குதல்கள் நடந்து வருகிறது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கராச்சி அருகே இருக்கும் ஈசா நக்ரில் மின் வெட்டை கண்டித்து போராட்டம் நடந்தது. அப்போது பழைய காஜிகேம்ப் பகுதியில் இருக்கும் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தின்மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது .

இதை தொடர்ந்து அந்த கும்பல்மீது போலீசார் மதஅவமதிப்பு வழக்கு பதிவுசெய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்தகும்பல் ஈசா நக்ரியில் இருக்கும் மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்தை அடித்துநொறுக்கியது. ஆயுதம் தாங்கி கும்ம்பல் வெறியுடன் அங்கு வந்து. பூட்டப்பட்டிருந்த தேவாலயத்தின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்த கிடைத்த பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கியது, புனித பைபிள்களை தரையில் வீசி எறிந்தனர். அங்கு இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த வருட தொடக்கத்தில் இருந்து இது வரை இப்பகுதியில் ஆறு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்களும், கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply