நாட்டில்  நடைபெறும் ஊழல்களுக்கு எல்லாம் சோனியா காந்தி  மவுனமாக இருப்பது ஏன்? நாட்டில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களுக்கு எல்லாம் சோனியா காந்தி பதில் தராமல் , மவுனமாக இருப்பது ஏன் என பா.ஜ.க.,வின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியு ள்ளார்.

டெல்லியில் நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது 2ஜி ஊழல் ,

வதேரா மீதான ஊழல் புகார், நிலக்கரி சுரங்க ஊழல் , மத்திய அமைச்சர்களின் மீதான ஊழல் புகார் என்று எதற்குமே சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் பதில் தராமல் மவுனம் சாதிப்பது ஏன்? இப்படி மத்திய அமைச்சர்கள் மீதான புகார்களுக்கு உயர் பதவி வகிக்கும் பிரதமர் மன்மோகன்சிங் பதில் தராமல் இருப்பது எந்தவகையில் நியாயம்? என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுபினார் .

சோனியா காந்தியும் , மன்மோகன் சிங்கும் பலகோடி மக்களின் கேள்விகளுக்கு பதில்சொல்லியே தீரவேண்டும் , இப்படி ஊழல் பற்றி வாய்திறக்காமல் பிரதமர், சோனியா இருவருமே மவுனம் சாதிப்பது கடும்கண்டனத்துக்கு உரியது என நிர்மலா சீதாராமன் கண்டனம் விடுத்துள்ளார்.

Tags:

Leave a Reply